

பல்லியா,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த ராணி (வயது 20) என்பவர் சர்தார் என்கிற இடத்தில் ராட்டினத்தில் சவாரி செய்தார்.
ராட்டினம் மேல் நோக்கி சுற்றிக்கொண்டிருந்த போது அவர் இருக்கையில் இருந்தபடி செல்போனில் செல்பி படம் எடுக்க முயன்றார். இதில் அவர் நிலைநடுமாறி ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.