காதலனுடன் இளம்பெண் தனிமையில் உல்லாசம்... பெற்றோருக்கு தெரிந்த விஷயம்... அடுத்து நடந்த சோகம்

இளம்பெண் பூமிகா டயர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
காதலனுடன் இளம்பெண் தனிமையில் உல்லாசம்... பெற்றோருக்கு தெரிந்த விஷயம்... அடுத்து நடந்த சோகம்
Published on

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுன் பகுதியில் வசித்து வந்தவர் பூமிகா (வயது 19). இவர் அங்குள்ள டயர் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் டோங்ரிசாப் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பல்வேறு இடங் களில் சுற்றித்திரிந்த அவர்கள், இளம்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் பூமிகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், வேறு மத வாலிபரை காதலிப்பதை கைவிடும்படி தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாத பூமிகா, டோங்ரிசாப்புடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். அத்துடன் காதலன் டோங்ரிசாப்பை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்ததுடன், அவரை தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி உள்ளார். ஆனால், இந்த திருமணத்துக்கு பூமிகாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூமிகா தனது காதலனுடன் சேர முடியாது என்று எண்ணி, தனது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் டார்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த பெற்றோர். பூமிகா தூக் கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக பாகல்கோட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பூமிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com