

ஐதராபாத்,
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் கிராந்தி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கிராந்தி வீட்டில் பழுதாகி கிடந்த ஏசியை சரி செய்ய ஷேக் அகமத்(27) வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு ஆசைவார்த்தை கூறியதை அடுத்து கணவரை சட்டப்படி பிரிந்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் கிராந்தி ஏற்கனவே திருமணமானவர் என்பதாலும் ஷேக் அகமதுவின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்த போதிலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷேக் அகமது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார்.
அவ்வப்போது கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைமுடித்துவிட்டு சோர்வாக வீட்டிற்கு வந்த ஷேக் அகமத் வந்துள்ளார். அப்போது கிராந்தி ஆசையாக இருக்குமாறு அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஷேக் அகமது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராந்தி ஷேக் அகமத்தை வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷேக் அகமதை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.