தோழியின் காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

ஸ்வேதாவின் காதலனுடன் அவரது தோழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தோழியின் காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா (வயது 25). இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். ஸ்வேதா தனது காதலனை சந்திக்க செல்லும்போது திருமணமான தனது தோழி ஒருவரையும் அழைத்து சென்று வந்துள்ளார். இதனால் ஸ்வேதாவின் காதலனுடன் அவரது தோழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக உருமாறியது.

இதனால் ஸ்வேதாவுக்கு தெரியாமல் காதலனும், தோழியும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் காதலியின் தோழியுடன் உல்லாசமாக இருந்ததை வாலிபர் தனது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் காதலனின் செல்போனை ஸ்வேதா சமீபத்தில் வாங்கி பார்த்துள்ளார். அப்போது தனது காதலனுடன் தன்னுடைய தோழி உல்லாசமாக இருந்த படங்கள், வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த ஆபாச படங்களை காதலனின் செல்போனில் இருந்து தனது செல்போனுக்கு ஸ்வேதா பகிர்ந்து கொண்டார்.

பின்னர் காதலன், தோழியுடன் அவர் தகராறு செய்துள்ளார். மேலும் தனது காதலுக்கு துரோகம் செய்த காதலனையும், தோழியையும் பழிவாங்க ஸ்வேதா திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட தோழியின் ஆபாச படங்களை அவரது கணவருக்கே ஸ்வேதா அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ, படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி வந்துள்ளார்.

இதையடுத்து தோழியின் கணவர், ஸ்வேதா மீது சாம்ராஜ் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு ஸ்வேதாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அவரது செல்போனில் அரசியல்வாதிகள் உள்பட பலரின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், ஸ்வேதாவின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com