ஆதாருக்கு பதிலாக 16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி கொண்டு வர மத்திய அரசு அதிரடி திட்டம்

ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி கொண்டு வர மத்திய அரசு அதிரடி திட்டமிட்டு உள்ளது. #VirtualID #Aadhaar
ஆதாருக்கு பதிலாக 16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி கொண்டு வர மத்திய அரசு அதிரடி திட்டம்
Published on

110 கோடி மக்கள் பயன்படுத்தும் ஒரு பெரிய அடையாள அட்டை அமைப்பு தனக்கு தகுந்தாற்போல் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. தற்போது அனைவரும் 16 இலக்க தற்காலிக எண்ணை ஆதார் எண்ணிற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆதார் எண் இல்லாமல் இனி ஒரு அணுவும் அசையாது என்பது பல நலதிட்ட உதவிகள் முதல், நம் சொத்து விவரம் வரை இனி அனைத்தும் ஒரே லைனில் வரும்...

இதற்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதே சமயத்தில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி வந்ததால், இதற்கு மாற்று என்ன என்று யோசித்த மத்திய அரசு தற்போது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது .

அதன்படி, விர்சுவல் ஐடி கொடுக்கப்பட்டு உள்ளது.

தனி மனித ரகசியத்தை காக்க, ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த மெய்நிகர் ஐடி எனப்படும் விர்ச்சுவல் ஐடி உருவாக்கலாம். அதாவது ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதலில் UIDAI வெப்சைட் ஓபன் செய்து அதில்12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டால், தானாகவே,16 இலக்க எண்களை கொண்ட VIRTUAL ID கிடைக்கும்.

ஒரு முறை இந்த விர்ச்சுவல் ஐடி பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதன் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.

எப்போது செயல்பாட்டுக்கு வருகிறது ?

விர்ச்சுவல் ஐடி பெற, மார்ச் 1 ஆம் தேதி முதல், UIDAI வெப்சைட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விர்ச்சுவல் அடையாள எண்ணை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

VIRTUAL எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது...

மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல், இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வர உள்ளது. அதாவது எங்கெல்லாம் VIRTUAL எண்ணை பயன்படுத்த வேண்டுமோ. அங்கெல்லா, இதை பயன்படுத்தலாம்

#VirtualID #Aadhaar #UIDAI

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com