

பனாஜி,
கோவா மாநிலம், பனாஜியில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் பேசிய ரவிசங்கர் பிரசாத், எனது ஆதார் அட்டையில் என்ன இருக்கிறது? எனது புகைப்படம் உள்ளது. நான் ஆண் என்பதும், என் பாட்னா நிரந்தர முகவரியும் உள்ளது. என்னவெல்லாம் இல்லை என்றால், என் மதம், என் சாதி, என் வருமானம், என் ஆரோக்கியம் குறித்த தகவல்கள், பிற அந்தரங்க தகவல்கள் இல்லை. ஆதார் பதிவில் எனது கைவிரல் ரேகைப்பதிவுகள், என் கண்ணின் கருவிழிப்படலம் உள்ளது.
அது பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது என கூறினார்.