இந்தியா முழுவதும் 21 கோடி வருமான வரி கணக்கு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு

இந்தியா முழுவதும் 21 கோடி வருமான வரி கணக்கு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் 21 கோடி வருமான வரி கணக்கு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு
Published on

புதுடெல்லி,

வருமான வரி கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ந் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 24ந் தேதி வரை இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இதுவரை 41 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 969 வருமான வரி கணக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 40 கோடியே ஒரு லட்சம் வருமான வரி கணக்கு எண்கள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 50 சதவீத வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த தகவலை வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com