

ஜலந்தர்,
ஜலந்தரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சொகுசு பேருந்து சேவையைத் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு. கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை. ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனைத் தொடங்குவது உட்பட, ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் பஞ்சாபை துடிப்பானதாக்குவோம். முந்தையை அரசு பஞ்சாப் அரசை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், முந்தைய ஆட்சிகள் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது குண்டர்கள் அரசியல் ஆதரவைப் பெற்றனர். மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.