பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பகவந்த் மான் மீண்டும் போட்டி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பகவந்த் மான் மீண்டும் போட்டி
முதல்-மந்திரி பகவந்த் மான்
Published on: 

சண்டிகார்,

பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு இதில் மிக முக்கியமாக, தற்போதைய முதல்-மந்திரி பகவந்த் மான் மீண்டும் தனது சொந்த தொகுதியான துரி சட்டமன்ற தொகுதியிலேயே போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 117 இடங்களை கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்மட்ட கூட்டம்

இதற்கிடையே, பஞ்சாப் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நேற்று ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் மணிஷ் சிசோடியா மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டு விரிவான ஆலோசனை நடத்தினர்.

40 வேட்பாளர்கள் பட்டியல்

இந்த ஆலோசனையை தொடர்ந்து, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த முதற்கட்ட பட்டியலில் மொத்தம் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மீண்டும் துரி தொகுதி

இதில் மிக முக்கியமாக, தற்போதைய முதல்-மந்திரி பகவந்த் மான் மீண்டும் தனது சொந்த தொகுதியான துரி சட்டமன்ற தொகுதியிலேயே போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகார குழு கூட்டத்திற்கு பிறகே, இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்தி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X