

மும்பை
பாலிவுட் நடிகர் அமீர்கானும், அவரது மனைவி கிரணும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அமீர்கானும், மனைவியும் இன்று புனா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனமான பாணி அறக்கட்டளை சார்பாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காணொலி காட்சி மூலம் பேசிய அமீர்கான் தானும், மனைவியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு தம்பதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.