ரூ.7 கோடி கேட்டு கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்; போலீசில் புகார்

பணம் கொடுக்கவில்லை என்றால், கெஜ்ரிவாலும், அவருடைய மகளும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
ரூ.7 கோடி கேட்டு கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்; போலீசில் புகார்
Published on: 

மொஹாலி

கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய மகளுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ரூ.7 கோடி

இதுபற்றி பஞ்சாப் போலீசார் கூறும்போது, திலக் நகர் எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங்கிற்கு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பும், வாட்ஸ்அப் தகவல் ஒன்றும் வந்தது. தொலைபேசியில் பேசிய நபர், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர் என்றும் கெஜ்ரிவாலிடம் இருந்து ரூ.7 கோடி வாங்கி தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால், கெஜ்ரிவாலும், அவருடைய மகளும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது. எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கெஜ்ரிவால் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும்படியும், அவர் கேட்டு கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதனை அடுத்து, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுனில் குமார் தலைமையில் போலீஸ் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய மொபைல் எண்ணுடன் தொடர்புடைய இருப்பிட தகவல், தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது.

X