டெல்லி மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி அரசு பதிவு செய்கிறது - பாஜக குற்றச்சாட்டு

டெல்லி மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி அரசு பதிவு செய்கிறது என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி அரசு பதிவு செய்கிறது - பாஜக குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, டெல்லி மக்கள் மற்றும் டெல்லிக்கு வருவோரின் தொலைபேசி உரையாடல்களை ஆளும் ஆம் ஆத்மி அரசு பதிவு செய்வதாக குற்றம் சாட்டினார்.

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அமைத்த குழு ஒன்று இதை செய்வதாக தெரிவித்த மனோஜ் திவாரி, இது ஒரு அடிப்படை உரிமை மீறல் என்றும் கூறினார்.

இவ்வாறு சேகரிக்கும் தகவல்களை ஆம் ஆத்மி அரசு வெளியிடுகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாஜக எம்.பி.யின் இந்த குற்றச்சாட்டு மக்களவையில் அதிர்வலைகளை கிளப்பியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com