பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. - அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. - அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 19 July 2025 7:49 PM IST (Updated: 19 July 2025 7:56 PM IST)
t-max-icont-min-icon

பாடகியான இவர் 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

சண்டிகர்,

பஞ்சா மாநிலம் ஹரர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அன்மொல் கஹன் மான் (வயது 35). பாடகியான இவர் 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அன்மொல் சுற்றுலா, கலாசாரத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். ஆனால், 2024ம் ஆண்டு அன்மொல் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அன்மொல் கஹன் மான் எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலை விட்டு விலகுவதாகவும் அன்மொல் அறிவித்துள்ளார்.

அரசியலை விட்டு விலகுவதற்கான காரணம் குறித்து அன்மொல் தெரிவிக்கவில்லை. அதேவேளை, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story