ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளார் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்,

200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தேர்தலுக்கான, 23 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது. பட்டியலில் முதல் இடத்தில், கங்காநகர் தொகுதியில் டாக்டர் ஹரிஷ் ரஹேஜா நிறுத்தப்பட்டுள்ளார். 2018 தேர்தலில் காங்கிரசால் டிக்கெட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாகப் போட்டியிட்ட பாஜகவின் ஜெய்தீப் பிஹானிக்கு எதிராக ரஹேஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னா ராம் மேக்வால் ராய்சிங்நகர் (எஸ்சி) தொகுதியிலும், மஹந்த் ரூப்நாத் பத்ரா சட்டமன்றத் தொகுதியிலும், ராஜேந்திர மாவர் பிலானிக்கும் (எஸ்சி), விஜேந்திர தோடசரா நவல்கர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாக கட்சிகள் வெளியிட்டிருந்தது. காங்கிரஸ் இதுவரை 95 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டாவது பட்டியலில் 43 பேரின் பெயர்களும், முதல் பட்டியலில் 33 வேட்பாளர்களும் இடம் பெற்றிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com