டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

பகவந்த் சிங் மன் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனைக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
Published on

சண்டிகார்,

டெல்லியில் வருகிற 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட ஒரு காரில் இருந்து நேற்று முன்தினம் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். அங்கும் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் நிலையில், டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன் வீட்டில் நேற்று தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். எனினும் இதில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என தெரிகிறது. அதேநேரம் இந்த சோதனை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன் கூறியதாவது:

டெல்லிக்குள் பாஜக.,வினர் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். ஆனால் டெல்லி போலீசாரும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லை. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பாஜக.,வின் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com