தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும் - ராகவ் சத்தா

இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
AAP's MP Raghav Chadha
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் மக்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ராகவ் சத்தா அவையில் இன்று பேசும்போது,

"நமது நாடு இளமையான நாடுகளில் ஒன்று. வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக நாம் இருக்கிறோம். மாறாக, இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடாக நாம் இருக்க வேண்டும். இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25 வயதிலிருந்து 21 ஆகக் குறைக்க வேண்டும். புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க 18 வயதில் மக்கள் வாக்களிக்க முடியும் என்றால், 21 வயதில் தேர்தலிலும் போட்டியிடலாம்." என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com