ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில். இச்சிறுவன் கடந்த வியாழக்கிழமை தனது உறவினருடன் வயலுக்கு சென்றுள்ளான். வயலில் வேலை செய்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் சிறுவனும், அவரது உறவினரும் குளித்துள்ளனர்.

சிறுவன் பலி

அப்போது, ஆற்றில் இருந்த முதலை குளித்துக்கொண்டிருந்த சிறுவனை கடித்துக்கொன்று இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் தீவிர தேடுதலுக்குப்பின் சிறுவனின் உடல் பாகங்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com