பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்துக்குமாறிய அபிஜீத் திப்கே குடும்பத்தினர்

அபிஜீத் திப்கே இந்தியா வர உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்துக்கு மாறிய தகவல் வெளியாகி உள்ளது.
அபிஜீத் திப்கே
Published on

மும்பை,

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. சமூகவலைதளங்களில் இந்த கட்சிக்கு இளைஞர்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்து உள்ளது. கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வர உள்ளார். அவர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அபிஜீத் திப்கே குடும்பத்தினர் சத்ரபதி சம்பாஜிநகரில் வாலுஜ் பகுதியில் வசித்து வருகின்றனர். சமூகவலைதளத்தில் வந்த மிரட்டல்களை அடுத்து அபிஜீத் திப்கே குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. அபிஜீத் திப்கே இந்தியா வர உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்துக்கு மாறிய தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அபிஜீத் திப்கே அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவரது பெற்றோர் பகவான்ராவ் திப்கே, தாய் அனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com