நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வருகை

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வருகை
Published on

புதுடெல்லி,

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார். மற்ற இருவர் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆவர். இவர்களில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரான டஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவியாவார். கடந்த 2015ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

"உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான பரிசோதனை அணுகுமுறைக்காக" இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு பொருளாதாரத்தில் முதுநிலை பட்டப்படிப்பினை அபிஜித் பானர்ஜி நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு அவர் இன்று வருகை தந்துள்ளார்.

இதன்பின்பு துணைவேந்தர் எம். ஜெகதீஷ் குமாரை சந்தித்து பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com