

புதுடெல்லி,
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து 2019 பிப்ரவரி 26-ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது. அப்போது விமானப்படை போர் விமான கமாண்டரான அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாக்கி வீழ்த்திவிட்டு, பாகிஸ்தான் எல்லைக்குள் தவறி விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.
இதையடுத்து இருநாடுகளுக்கும் போர்மூழும் அபாயம் இருந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அபிநந்தன், பாகிஸ்தானால் திரும்ப ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து பதற்றம் தணிந்தது.
அபிநந்தன், இந்தியர்களின் மனதில் நிஜ ஹீரோவாக பதிந்தார். அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தற்போது அந்த ராணுவ கமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு பெற்று உள்ளார் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.