காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறினார்
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி
Published on

புதுடெல்லி

இன்று 72-வது இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் ராணுவ தின கொண்டாட்டங்கள் களை கட்டின.

ராணுவத்தினரின் வண்ணமிகு அணிவகுப்புகள் கண்ணைக் கவர்ந்தன. முழுவதும் ஆண் வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்புக்கு கேப்டன் தானியா ஷேர் கில் என்ற பெண் ராணுவ அதிகாரி தலைமயேற்று நடத்தினார்.

ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.

பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது;-

ஜம்மு-காஷ்மீரில் 370 வது சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின் முடிவு, ஒரு 'வரலாற்று நடவடிக்கை' இது 'மேற்கு அண்டை நாடுகளின்' பினாமி போரை சீர்குலைத்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பல வழிகள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம். இந்திய இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, உலகளாவிய முன்னேற்றங்களில் ஒரு கண் வைத்திருக்கிறது.

'தொழில்நுட்ப நீதியாகவும் ' மற்றும் 'சுதேசமயமாக்கல்' தொடர்பாகவும் இந்திய ராணுவம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், நம்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படவும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம். என கூறினார்.

முன்னதாக இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com