நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்தது அதிர்ச்சி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்தது அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தகுதி (கட்-ஆப்) மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மத்திய அரசு குறைத்து உள்ளது. இது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை பெற்று வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், 'முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்திருப்பது முற்றிலும் அதிர்ச்சி அளிக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க முடியாது என கடந்த ஜூலை மாதம் டெல்லி ஐகோர்ட்டில் அரசு தெரிவித்த நிலைப்பாட்டில் இருந்து இது முழுமையான பல்டியடித்தல் ஆகும்' என சாடியுள்ளார்.

நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை அதிக விலைக்கு விற்க நினைக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் இது பலன் அளிக்கும் என குற்றம் சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், தகுதி பெறாத மிகவும் செல்வாக்கு மிக்க பா.ஜனதா நிர்வாகிகளின் பிள்ளைகளுக்குப் பயனளிக்கும் வகையில் இந்த பல்டியடித்தல் நடந்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com