அக்சென்ச்சர் பணிநீக்கம்...! இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு ஏற்படும்...!

உலகம் முழுவதும் அக்சென்ச்சர் நிறுவனத்தில் சுமார் 7.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அக்சென்ச்சர் பணிநீக்கம்...! இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு ஏற்படும்...!
Published on

புதுடெல்லி

அமெரிக்கா மற்றும் உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், பெரிய டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். அமேசான் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக கிட்டத்தட்ட தலா 10ஆயிரம் பேரை நீக்குவதாக அறிவித்துள்ளன.

இந்த வரிசையில் அக்சென்ச்சர் நிறுவனமும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, புனே, நொய்டா போன்ற நகரங்களில் அக்சென்ச்சர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

உலகம் முழுவதும் அக்சென்ச்சர் நிறுவனத்தில் சுமார் 7.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 40 சதவீத ஊழியர்கள் இந்தியாவில் பணிபுரிகின்றனர். அதாவது ஏறத்தாழ 3 லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் 7000 முதல் 7500 பேருக்கு வேலை பறிபோகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையொல், இந்தியாவில் யாரை எல்லாம் பணிநீக்கம் செய்யலாம் என்பது குறித்து எச்ஆர் துறை பட்டியல் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு புராஜெக்ட்டிலும் நியமிக்கப்படாமல் இருக்கும் ஊழியர்களின் பட்டியலை முதற்கட்டமாக அக்சென்ச்சர் நிறுவனத்தின் எச்ஆர் துறை தயார் செய்து வருகிறது. முதற்கட்டமாக இவர்கள்தான் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இவர்களை பணிநீக்கம் செய்தபின் அடுத்தகட்டமாக யாரை பணிநீக்கம் செய்வது என்பது குறித்த பட்டியலை அக்சென்ச்சர் நிறுவனத்தின் HR துறை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com