சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
Published on

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடசராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிக்ரதலாப் கிராமத்திற்கு அருகே ஜபல்பூர்–அமர்கண்டக் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த பிக்-அப் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனதால், அதனை சரிசெய்ய சாலையோரம் நின்றிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் பிக்-அப் வாகன டிரைவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குக் காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com