கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது விபத்து: 4 பேர் பலி

கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது விபத்து: 4 பேர் பலி
Published on

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அதே போல் கும்பமேளாவிற்கு சென்று புனித நீராடிவிட்டு வீடு திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று காலை 6.30 மணியளவில் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் தர்நாகர் கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது . இந்த விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் அதில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பாய் (30), அனில் பிரதான் (37), தாக்கூர் ராம் யாதவ் (58), மற்றும் ருக்மிணி யாதவ் (56) ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com