காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு? முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு குறித்து, முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு? முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள அகலயா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.தனது இறுதிச்சடங்கில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ மூலம் தனது விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, தற்கொலை செய்து கொண்ட விவசாயி சுரேசின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். நாம் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், கோர்ட்டுகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறிய கருத்துப்படி தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக விரைவில் கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com