டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு முந்தைய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியது. பின்னர் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர வழங்கிய அனுமதியை மாநில அரசு வாபஸ் பெற்றது.
இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story






