மகனின் மொபைல் போனை திருடியதாக 5 சிறுவர்களின் கையை கொதிக்கும் எண்ணையில் முக்கியவர் கைது

மகனின் மொபைல் போனை திருடியதாக அவனது நண்பர்கள் 5 சிறுவர்களின் கையை கொதிக்கும் எண்ணையில் முக்கிய தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் மொபைல் போனை திருடியதாக 5 சிறுவர்களின் கையை கொதிக்கும் எண்ணையில் முக்கியவர் கைது
Published on

போபால்

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சாகன் இவர் தனது மகனுக்கு மொபைல் போன் வங்கி கொடுத்து இருந்தார். அந்த மொபைல் போனை காணவில்லை. அவரது மகன் தனது மொபைல் போனை தனது நண்பர்கள் எடுத்து விட்டதாக தனது தந்தையிடம் கூறி உள்ளான்.

இதை தொடர்ந்து சாகன் தனது மகனின் நண்பர்கள் 5 பேரை அழைத்து மொபைல் போனை யார் எடுத்தது என விசாரித்தார். ஆனால் யாரும் மொபைல் போனை எடுக்கவில்லை என மறுத்தனர்.இதை தொடர்ந்து ஒரு பானையில் எண்ணையை ஊற்றி சூடுபடுத்திய சாகன் நீங்கள் எடுக்கவில்லைஎ ந்ரால் இந்த பானைக்குள் கைவிடுங்கள் எடுக்காதவர்கள் கை ஒன்றும் ஆகாது என்றும் எடுத்தவர்கள் கை கருகிவிடும் என கூறி உள்ளார்.

5 சிறுவர்களும் கையை பானைக்குள் விட்டு உள்ளனர். அவர்கள் 5 பேரின் கையும் தீப்புண்களாகியது. இதைபார்த்த அவர்களது பெற்றோர்கள் சிறுவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர். இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் சாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com