

புதுச்சேரி,
புதுச்சேரி காமராஜ் நகரில் இருசக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்-மந்திரி நாராயணசாமி ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து முதல்-மந்திரி நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் சென்றதை சுட்டிக்காட்டி சமூகவலைதளத்தில் ஆளுநர் கிரண்பேடி பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில், 'காமராஜ் நகர் பிரச்சாரத்தின்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதல்-மந்திரி நாராயணசாமி மீது காவல்துறை தலைவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் நாராயணசாமி டுவிட்டர் பதிவில்,
இரு சக்கரவாகனத்தில் செல்லும் போது ஆளுநர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரிடமும் ஹெல்மெட் அணியுமாறு கிரண்பேடி கேட்டிருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் நாராயணசாமி ஸ்கூட்டர் ஓட்டும் படத்துடன் டுவீட் செய்த ஆளுநர் கிரண்பேடிக்கு இருசக்கர வாகனத்தின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் கிரண்பேடி பயணிக்கும் படத்தை பதிவிட்டு நாராயணசாமி பதிலடி தந்துள்ளார்.