கர்நாடகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் சில தொழில் நுட்ப பிரச்சினைகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி எனது கவனத்திற்கும் வந்துள்ளது. அதுபற்றி அதிகாகளிடமும் முழுமையாக கேட்டு அறிந்து கொண்டுள்ளேன்.

தொழில்நுட்ப பிரச்சினையை சரி செய்யும்படி சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாக தொடங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ் சேவையை எந்த பிரச்சினையும் இன்றி தொடர சுகாதாரத்துறை அதிகாகள் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com