இந்தியாவில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.
இந்தியாவில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு...!
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆக உள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 219 கோடியே 97 லட்சத்து தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com