இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,559- ஆக உள்ளது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 854 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 674 ஆக உள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 220 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com