பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை பாதுகாப்புடன் கொச்சி அழைத்து செல்கிறது போலீஸ்

பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை பாதுகாப்புடன் போலீஸ் கொச்சி அழைத்து செல்கிறது.
பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை பாதுகாப்புடன் கொச்சி அழைத்து செல்கிறது போலீஸ்
Published on

பம்பை,

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்திய நிலையில் செய்தியாளர் கவிதா மற்றும் கேரள பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை கேரள அரசு திரும்பி அனுப்பியது. இருவரும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே கொச்சியில் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவருடைய வீட்டில் கற்கள் வீசப்பட்டது. ரஹானா பாத்திமாவை போலீஸ் பலத்த பாதுகாப்புடன் கொச்சிக்கு அழைத்து செல்கிறது.

ரஹானா பாத்திமா பேசுகையில், எங்களை அனுமதிக்க விடாது, அமைதியை சீர்குலைக்க விரும்பியவர்கள் பக்தர்கள் கிடையாது. என்ன காரணம் என்று எனக்கு தெரிய வேண்டும். பக்தராக இருக்க என்ன வேண்டும். அதனை முதலில் என்னிடம் சொல்லுங்கள். அதன்பின்னர் நான் பக்தரா? இல்லையா? என்பதை தெரிவிக்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. என்னுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் எனக்கு பாதுகாப்பு அளிப்பதாக போலீஸ் கூறியுள்ளது. எனவேதான் நான் திரும்ப செல்கிறேன், என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com