நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற கோரிக்கை

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் மீது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை பெண்கள் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற கோரிக்கை
Published on

புதுடெல்லி

சமூக ஆர்வலர்கள் பலர் சானிடரி நாப்கின்களை நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக இடதுசாரி மாணவர் அமைப்பும், மகளிர் அமைப்பும் நாப்கின்கள் மீது வாசகங்களை எழுதி அனுப்பிவைத்துள்ளனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட காணொலி ஒன்றில் நிதியமைச்சருக்கு நாப்கினை அனுப்பி வைக்கும்படி சில மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வரி நியாயமற்றது என்று மகளிர் அமைப்பினர் கூறியுள்ளனர்.

கருத்தடுப்பு சாதனங்களும், ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும் போது ஏன் நாப்கின்களுக்கு வரி விலக்கு செய்யக்கூடாது? என்பது அவர்களது கேள்வி.

என்றாலும் ஜிஎஸ்டிக்கு முன்பு நாப்கின்களுக்கு 13.7 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இப்போது ஜிஎஸ்டி முறையில் 12 சதவீதமாகவுள்ளது. நாப்கின்களை சொகுசு பொருட்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். உண்மையில் பெண்கள் தங்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாப்கின்கள் தேவை. விலையுயர்ந்தால் ஏழை மகளிர் நாப்கினை தவிர்த்துவிடுவார்கள் என்றார் மாணவர் அமைப்பின் தலைவரான விகாஸ் பாதௌரியா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com