

மராட்டியத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அஜய் தேவ்கன் நடித்துள்ள 'விமல் ஏலக்காய்' விளம்பரமானது, தடை செய்யப்பட்ட ‘விமல் பான் மசாலா' பொருளுக்கான மறைமுக விளம்பரம் என்று உணவு பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதேபோல் இந்த விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீசை எதிர்த்து, இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நடிகர் அஜய் தேவ்கன் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்த விளம்பரத்தை தயாரித்து வெளியிட்ட உற்பத்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பாமல், அதில் ஒரு நடிகராக பங்கேற்ற எனக்கு மட்டும் உணவு பாதுகாப் புத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது முற்றிலும் தன்னிச்சையானது மற்றும் சட்டத் திற்கு புறம்பானது" என்று கூறி இருந்தார்.
இந்த மனு மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற் றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வரு கிற 4-ந்தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் துக்காராம் முண்டே, "நடிகர் அஜய் தேவ்கன் ஐகோர்ட்டை நாடியிருந்த போதிலும், உணவு பாதுகாப்புத்துறை தனது துறை ரீதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று தெரிவித்து இருந்தார்.