

திருவனந்தபுரம்,
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை தெரிவிக்க டுவிட்டரில் மீ டூ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், நடிகைகள், பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது இந்திப்பட பெண் டைரக்டர் டெஸ் ஜோசப், மீ டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு, கோடீஸ்வரன் என்ற டி.வி. நிகழ்ச்சியை முகேஷ் தொகுத்து வழங்கினார். அதன் படப்பிடிப்புக்காக, நான் ஓட்டலில் தங்கி இருந்தபோது, அடிக்கடி அவர் என் அறைக்கு வந்தார். ஓட்டல் ஊழியர்களை வற்புறுத்தி, தனது அறைக்கு அருகே என் அறையை மாற்றினார். நல்லவேளையாக, அப்போதைய எனது முதலாளி டெரிக் ஓ பிரையன், என்னை ஊருக்கு அனுப்பி காப்பாற்றினார் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதை முகேஷ் மறுத்துள்ளார். அந்த படப்பிடிப்போ அல்லது டெஸ் ஜோசப்போ எனக்கு நினைவில் இல்லை என்று அவர் சிரித்தபடி கூறினார்.