மேற்கு வங்காள முதல்-மந்திரியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான்

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் நடிகர் சல்மான் கான் இன்று சந்தித்து உள்ளார்.
மேற்கு வங்காள முதல்-மந்திரியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான்
Published on

கொல்கத்தா,

பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகரான ஷாருக் கான், அடிக்கடி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு வருகை தருபவர். ஆனால், அவரை போன்று நடிகர் சல்மான் கான் இல்லை.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் காலிகட் நகரில் உள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு நடிகர் சல்மான் கான் இன்று நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார்.

இதனால், அவரை பார்ப்பதற்காக கொல்கத்தா நகரவாசிகள் திரண்டு விட்டனர். மம்தாவை சந்தித்ததும், வணக்கம் தெரிவித்த சல்மான் கானுக்கு சால்வை போர்த்தி மம்தா பானர்ஜி கவுரவப்படுத்தினார்.

காரில் இருந்து இறங்கியதும், அவரை வாசல் வரை வந்து மம்தா பானர்ஜி வரவேற்றார். இதனால், வீட்டுக்குள் செல்ல சல்மான் கான் அவசரம் காட்டினார். அப்போது, புகைப்படக்காரர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வோம் என மம்தா பானர்ஜி கூறி, அவரை நிறுத்தி இருவரும் அதற்கு தயாரானார்கள். அதன்பின் கையசைத்து விட்டு இருவரும் சென்றனர்.

நடிகர் சல்மான் கான் ஏறக்குறைய 30 நிமிடங்கள் வரை முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம், அவரது இல்லத்தில் இருந்து பேசி விட்டு பின்னர், தங்கியுள்ள ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அவர் தபாங் தி டூர் ரீலோடட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்து உள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணியின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், நடிகைகள் சோனாக்சி சின்ஹா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com