நடிகர் சரத்பாபு உடல்நிலை பற்றி வதந்தி குடும்பத்தினர் விளக்கம்

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சரத்பாபு. இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது.
நடிகர் சரத்பாபு உடல்நிலை பற்றி வதந்தி குடும்பத்தினர் விளக்கம்
Published on

ஐதராபாத்,

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சரத்பாபு. இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் நோயின் பாதிப்பினால் உடல் உள்உறுப்புகள் செயல் இழந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சரத்பாபு உடல்நிலை குறித்து நேற்று இரவு தவறான வதந்தி பரவி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் வலைத்தளத்தில் சோகத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் சரத்பாபு உடல்நிலை குறித்து வெளியான தகவல் தவறானது என்று அவரது சகோதரி மறுத்துள்ளார். சரத்பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும், அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சரத்பாபுவுக்கு 71 வயது ஆகிறது. இவர் 1977-ல் பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் முலம் சினிமாவில் அறிமுகமானார். ரஜினிகாந்துடன் இணைந்து முள்ளும் மலரும், நெற்றிக்கண், முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி படத்தில் நடித்து இருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com