ஜூனியர் என்.டி.ஆருக்காக தனது படத்தின் பெயரை விட்டுக்கொடுத்த நடிகர் சிவராஜ்குமார்

ஜூனியர் என்.டி.ஆருக்காக தனது படத்தின் பெயரை நடிகர் சிவராஜ்குமார் விட்டு கொடுத்தார்
ஜூனியர் என்.டி.ஆருக்காக தனது படத்தின் பெயரை விட்டுக்கொடுத்த நடிகர் சிவராஜ்குமார்
Published on

பெங்களூரு: கன்னட திரைஉலகை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்த திரைப்படம் கே.ஜி.எப். மற்றும் கே.ஜி.எப்.-2. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான இந்த 2 படங்களும் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தன. இந்த நிலையில் இப்படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உடன் கைகோர்த்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ஒரு புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'அசுரா' என்று பெயரிட்டு உள்ளனர். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு 'அசுரா' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் பலரும் அந்த படத்தின் பெயரை வைக்க கூடாது என்று கூறினர். ஆனால் அந்த படத்தின் பெயர் உரிமையை நடிகர் சிவராஜ்குமாரின் விட்டுக் கொடுத்துள்ளார். அதனால் அந்த பெயரை தற்போது இவர்கள் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று ஜூனியர் என்.டி.ஆர்.-ன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com