சட்டவிரோத கட்டிட விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை நடிகர் சோனு சூட் வாபஸ் பெற்றார்

சட்டவிரோத கட்டிட விவகாரத்தில் நடிகர் சோனு சூட் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். கட்டிடத்தை ஒழுங்குப்படுத்த மாநகராட்சியிடம் விண்ணப்பிக்க போவதாக அவர் தெரிவித்தார்.
நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட்
Published on

சட்டவிரோத கட்டிடம்

சிம்பு நடித்த ஒஸ்தி, அனுஷ்கா நடித்த அருந்ததி உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தநிலையில் மும்பை ஜூகுவில் உள்ள தனது 6 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதால் மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஐகோர்ட்டு தள்ளுபடி

இதை எதிர்த்து அவர் மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி மும்பை சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அங்கு அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டை நாடினார். ஆனால் ஐகோர்ட்டும் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், மும்பை மாநகராட்சியை நாடி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அவரிடம் தெரிவித்தது. ஆனால் நடிகர் சோனு சூட் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

வாபஸ் பெற்றார்

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, வி.ராம சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது திடீர் திருப்பமாக நடிகர் சோனு சூட் வழக்கை வாபஸ் பெற்றார். சட்டவிரோத கட்டிடத்தை ஒழுங்குப்படுத்தக்கோரி மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்க போவதால் வழக்கை திரும்ப பெறுவதாக அவரது வக்கீல் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர்.

மேலும் கட்டிடத்தை ஒழுங்குப்படுத்தக்கோரி செய்யப்படும் மனுவில் இறுதி முடிவு எடுக்கும் வரை சோனு சூட் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com