

புதுடெல்லி,
பிரபல நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் அவர் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா நேற்று திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கேரளாவை சேர்ந்த பாத்திமா ரோஸ்னா என்பவர் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு பதிலாக காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நக்மாவிற்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதாதேவ் எம்.பி. தெரிவித்து உள்ளார்.