

ஜெய்ப்பூர்,
இந்தி நடிகை பாயல் ரோகத்கி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், நேரு-இந்திரா குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் அவரை நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் பண்டி நகர போலீசார் கைது செய்தனர். பாயலை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே, அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, பண்டியில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் அவருடைய வக்கீல் மனுதாக்கல் செய்தார். இதை ஏற்று தலா ரூ.25 ஆயிரத்துக்கான இருநபர் ஜாமீனில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.