நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
Published on

பெங்களூரு: பிரபல கன்னட நடிகை பிரணிதா. இவர் தமிழில் கார்த்தியுடன் 'சகுனி', சூர்யாவுடன் 'மாசு என்கிற மாசிலாமணி' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரணிதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொழில் அதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த பிரணிதா, தனது கர்ப்ப கால படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் ஆர்.வி. என்ற தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் குழந்தையுடன் இருக்கும் படத்தை பிரணிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரணிதாவுக்கு நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com