தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார்.
தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!
Published on

புதுடெல்லி,

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார். தென் கொரிய அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தென்கொரியா சுற்றுலாத்துறை தூதர்

தென் கொரியாவை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட மேட் இன் கொரியா திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com