போலீஸ் நிலையம் அருகே கொள்ளையர்களால் பிரபல நடிகை சுட்டுக்கொலை

தேசிய நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்க நின்றுகொண்டிருந்தபோது, கணவரை தாக்கிய கொள்ளையர்களை தடுக்க முயன்ற நடிகையை சுட்டுகொலை செய்தததாக கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் அருகே கொள்ளையர்களால் பிரபல நடிகை சுட்டுக்கொலை
Published on

ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரியா குமரி. இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்கள் குழந்தைகளுடன்

காரில் கவுரா தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே சென்றபோது

நீண்ட நேர பயணத்தால், சற்று ஓய்வெடுத்துக்கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக பிரகாஷ் குமார் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றது.

கணவனை மீட்க நடிகை ரியா குமாரி முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் நடிகையை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 3 கி.மீ. தூரம்வரை குல்காச்சியா-பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் உதவிக் கேட்டு கெஞ்சியுள்ளார். அப்போது அங்கு தென்பட்ட சில உள்ளூர் மக்களிடம் நடந்ததை பிரகாஷ் குமார் விளக்கிய நிலையில், ரியா குமாரியை உலுபெரியாவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக டாகட்ர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி வருவதாகவும், கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். "நாங்கள் நடிகையின் கணவரிடம் பேசினோம். உதவிக்காக அந்த நபர் அணுகிய உள்ளூர்வாசிகளிடமும் விசாரணை நடத்த உள்ளோம்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். அவர்களின் கார் தடயவியல் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com