முன்னணி செய்தி நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.
முன்னணி செய்தி நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், ஊடக துறையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை அதானி குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்.டி.டிவியின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கியது. டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பி.க்யூ. பிரைம் என்ற வணிகம் மற்றும் நிதி தொடர்பான செய்தி சேனலை குயின்டில்லியன் மீடியாவிடம் இருந்து வாங்கியது.

இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் வாங்கியுள்ளது. இதன்மூலம் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.

ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தின் வருமானம் 2022-23 நிதியாண்டில் 11.86 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com