அதானி விவகாரம்: மார்ச் 13ல் பேரணி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு

அனைத்து மாநில தலைநகரங்களிலும் கவர்னர் மாளிகையை நோக்கி மார்ச் 13ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதானி விவகாரம்: மார்ச் 13ல் பேரணி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது. உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில தலைநகரங்களிலும் கவர்னர் மாளிகையை நோக்கி மார்ச் 13ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அனைத்து மாநில தலைநகரங்களிலும் இந்த விவகாரம் தெடர்பாக காங்கிரஸ் சார்பில் பெதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பெதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்ற உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com