திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் கூடுதலாக வினியோகம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் கூடுதலாக வினியோகம் செய்யப்பட்டன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் கூடுதலாக வினியோகம்
Published on

திருமலை,

கொரோனா தொற்று பரவல் 2-வது அலையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் 5 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

நேற்று காலை 11 மணியளவில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 3 ஆயிரமாக உயர்த்தி 8 ஆயிரம் டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் சர்வர் இயங்கவில்லை பழுதானது. பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பப்பிரிவு அதிகாரிகள் சர்வர் கோளாறை உடனடியாக சரி செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் முன்பதிவு செய்தனர்.

ஆந்திராவில் ஒருசில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com