விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
Published on

உடுப்பி;

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கனமழை பெய்து வந்தது. இதனால் பலபகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவில் பெய்த கனமழைக்கு பலவீடுகள் நீரில் மிதந்தன.

மேலும், விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சாகுபடிக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இந்த நிலையில் கனமழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிடவும், அதற்கு தகுந்த நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரி உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பதாகைகளை ஏந்தி, போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பெய்த கனமழைக்கு உடுப்பி மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மழை வெள்ளம் முடிந்து பல நாட்கள் ஆகியும், அரசு சார்பில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே அரசு விவசாயிகள் மீது அக்கறை கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தின்போது அவர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தார் நாகரத்னா நடாவிடம் கொடுத்து அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com