ஆதித்யா எல்-1 விண்கலம்; ஒரு வாரத்தில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலம் 'லாக்ரேஞ்ச்' புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆதித்யா எல்-1 விண்கலம்; ஒரு வாரத்தில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
Published on

மும்பை,

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள 'லாக்ரேஞ்ச்' புள்ளி-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 6-ந்தேதி 'லாக்ரேஞ்ச்' புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஆதித்யா எல்-1 ஜனவரி 6-ந்தேதி மாலை 4 மணிக்கு 'லாக்ரேஞ்ச்' புள்ளியை அடையும். தொடர்ந்து ஆதித்யா எல்-1 இஞ்ஜின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தைக் கொண்டு, ஒளிவட்டப் பாதை (Halo Orbit) எனப்படும் சுற்றுப்பாதையில் நுழைகிறது.

'லாக்ரேஞ்ச் புள்ளி' என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையை நடுநிலையாக்கும் ஒரு பகுதி. இருப்பினும் சந்திரன், செவ்வாய், வீனஸ் போன்ற பிற கோள்களின் தாக்கத்தால் முழுமையான நடுநிலைப்பகுதி என்பது இருக்காது."

இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com